நண்பர்களுடன் நீராடியவருக்கு நடந்த விபரீதம்! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்

Valluvan Media
0

 பண்டாரகம பகுதியில் அமைந்துள்ள உயன்வத்த வாவியில் நீராடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.




நேற்று செவ்வாய்க்கிழமை (17) இப்பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போதே குறித்த நபர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளார்.

காணாமற்போன நபர் கோனபொல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்தன்று அவர் மேலும் சில நண்பர்களுடன் கூடி வாவியில் நீராடியுள்ளதுடன் இதன்போதே அவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தொடர்பில் கடற்படை சுழியோடிப் பிரிவினரின் உதவியுடன் பண்டாரகம பொலிஸார் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதையும் படிக்கவும்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top