அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் வங்கிக்கணக்குகளுக்கு! யார்யார் பெற்றுக்கொள்ளலாம்?

Valluvan Media
0
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், எழுபது வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாத கொடுப்பனவை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என நலன்புரி நன்மைகள் சபை ப தெரிவித்துள்ளது.




முதலாம் கட்டத்தின் கீழ், எழுபது வயதிற்கு மேற்பட்ட ஆறு இலட்சத்து இருபத்திரெண்டாயிரத்து நானூற்று அறுபத்திரெண்டு முதியோர்களுக்காக மூவாயிரத்து நூற்று பன்னிரெண்டு கோடியே முப்பத்தொரு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ், எழுபது வயதிற்கு மேற்பட்ட எழுபத்தொராயிரத்து மூந்நூற்று முப்பத்தொன்பது முதியோர்களுக்காக மூந்நூற்று ஐம்பத்தாறு கோடியே அறுபத்தொன்பது இலட்சத்து ஐம்பத்தாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தொகைகள் இன்று முதல் பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்படும் என்றும், பயனாளிகள் தங்களது அஸ்வெசும கணக்குகள் மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top