சினிமா பாணியில் இளம் தம்பதி செய்த திருவிளையாடல்! சிக்கியது எப்படி?

Valluvan Media
0

 நீர்கொழும்பில் சினிமாப் பாணியில் வீட்டுக்குள் நுழைந்த இளம் தம்பதி, பெண் ஒருவரை தாக்கிய நிலையில் தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.




91 வயது மூதாட்டியின் வாயைத் துணியால் கட்டி, அவரிடமிருந்து 45,000 ரூபாய் மதிப்புள்ள தங்க காதணிகளை திருடிய தம்பதியை, கட்டான பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள், நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனை அருகே கடந்த 26 ஆம் திகதி பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மூதாட்டியின் வீட்டில் தேங்காய் பறிக்கும் நோக்கில் உள்நுழைந்த இளம் தம்பதி, மூதாட்டியை திடீரென தாக்கிய நிலையில் மூதாட்டி சுயநினைவினை இழந்துள்ளார்.

இதன்போது மூதாட்டி அணிந்திருந்த தங்க காதணியை களவாடிக் கொண்டு குறித்த தம்பதியினர் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் வீட்டின் மேல் மாடியில் தங்கியிந்த மூதாட்டியின் பேத்தி, அவரை நீண்ட நேரம் காணவில்லை என தேடிய போது, தோட்டத்தில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அயல் வீட்டாரின் உதவியுடன் அவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட நகைகள் 45,000 ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டு, போதைப்பொருட்களை வாங்க பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம், மதுரங்குலியவைச் சேர்ந்த 27 வயதுடைய கணவர் மற்றும் 25 வயதுடைய, மனைவி என தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேக நபர்கள் இருவரும் பல ஆண்டுகளாக போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளமை பொலிஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top