மேலே சட்டையில்லாத ஃபோட்டோ.. அப்படி செஞ்சுட்டாங்க.. எப்படி இருக்கும்?.. கதறும் ரச்சிதா மகாலட்சுமி

Valluvan Media
0
நடிகை ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரையில் நடித்து பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர். அந்த நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட் செய்யப்பட்ட பிறகு சினிமா வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அப்படி அவர் Fire படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் அவர் ஓவர் கிளாமர் காட்டியிருந்தது ரிலீஸ் சமயத்தில் பெரிய பேசுபொருளானது.




இப்போது 99/66 என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. சின்னத்திரையில் நடித்து தமிழ்நாட்டில் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரை சாவித்திரி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். பல சேனல்களில் பல சீரியல்களில் நடித்த அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்ட அவர்; தன்னால் முடிந்த அளவுக்கு திறமையாகவே விளையாடினார். 



அவர் கலந்துகொண்டபோது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் அவரிடம் நெருக்கமாக பழக முயன்றது அனைவரிடமும் பேசுபொருளானது. நிகழ்ச்சியின் பாதியில் எவிக்ட் செய்யப்பட்ட ரச்சிதா; வெளியே வந்து சினிமா வாய்ப்புகளை பெற ஆரம்பித்தார்.

ஃபயர் மோடில் ரச்சிதா மகாலட்சுமி: அதன்படி ஃபயர் என்ற படத்தில் நடித்திருந்தார். அதில் இவருடன் சேர்த்து மொத்தம் நான்கு ஹீரோயின்கள் நடித்திருந்தார்கள். அனைவருமே அப்படத்தில் கிளாமர் காட்சிகளில் நடித்திருந்தாலும்; ரச்சிதா நடித்ததை வைத்து பெரிய விவாத போரையே சிலர் யூடியூபில் கிளப்பினார்கள். பணத்துக்காகத்தான் இப்படியெல்லாம் அவர் செய்கிறார் என்றும் கமெண்ட்ஸ்கள் பறந்தன. ஆனால் அப்படி எதுவும் இல்லை; கதைக்கு தேவைப்பட்டதால் மட்டும்தான் அப்படி நடித்தேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

அப்படத்துக்கு பிறகு சில படங்களில் கமிட்டாகியிருக்கும் அவர்; இப்போது 99/66 என்ற படத்தில் நடித்திருக்கிறார். எம்.எஸ்.மூர்த்தி என்பவர் இயகியிருக்கிறார். இதில் சிங்கம்புலி, பவன் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நிச்சயம் இப்படம் தன்னுடைய திரைத்துறை வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் மகாலட்சுமி.

 இந்நிலையில் அவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ரச்சிதாவின் பேட்டி: அவர் கொடுத்த பேட்டியில், "ஒரு கோயிலில் வெள்ளை புடவையில் சாமி கும்பிட்டபடி நான் இருந்த ஃபோட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தேன். உடனே சிலர் அந்த ஃபோட்டோவை மார்ஃபிங் செய்து நான் மேலே எதுவுமே போடாதபடி ஷேர் செய்திருந்தார்கள்.

 அதை பார்த்துவிட்டு கீழே கமெண்ட்ஸில் சென்று பார்த்தேன். ஒருவர் இது ஏஐயா உண்மையா என கேட்கிறார். அதற்கு இன்னொருவரோ, 'சொல்ல முடியாது டா உண்மையாக கூட இருக்கலாம்' என சொல்லியிருக்கிறார். அதேபோல் ஒரு சட்டை போட்டபடி ஃபோட்டோ போட்டிருந்தேன். அதிலும் இதே வேலையை செய்திருந்தார்கள். எல்லோரும் எனக்கு ஃபோன் செய்து இப்படி ஒரு ஃபோட்டோ போட்டியா என கேட்கிறார்கள். எனக்கு எப்படி இருக்கும்?' என வேதனையோடு கேள்வி எழுப்பினார் திருமணம் செய்துகொள்ளமாட்டேன்: 

மேலும் திருமணம் பற்றி பேசிய அவர், "எனக்கு திருமணத்தின் மீது இருந்த நம்பிக்கையே போய்விட்டது. எப்போதும் மீண்டும் அந்த நம்பிக்கையும் வராது. கண்டிப்பாக நான் வாழ்க்கை முழுவதும் திருமணம் செய்துகொள்ளவே மாட்டேன். வரும் மே மாதம் எனக்கு திருமணம் என்று யாரோ கிளப்பிவிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் மே மாதம் இப்படித்தான் ஏதாவது சொல்வார்கள். அதில் எதிலும் துளிக்கூட உண்மையில்லை" என்று அதிரடியாக தெரிவித்தார்.



Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top