பிரான்ஸில் சாதித்த ஈழத்து தமிழ்ப்பெண்! குவியும் பாராட்டுக்கள்

Valluvan Media
0

 பிரான்ஸ் நாட்டின் Pontault-Combault நகரில் அண்மையில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, ஆதித்யா ஆனந்தராசா அவர்கள் துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை நேற்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.




மார்ச் 15ஆம் தேதி நடைபெற்ற நகராட்சி தேர்தலின் முதல் சுற்று மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த நிர்வாக அமைப்புகளின் பின்னணியில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

இலங்கைப் பூர்வீகத்தைச் சேர்ந்த இவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஊர்காவற்றுறை தம்பாட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் தமிழர் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான இன்னொரு முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது.

19 வயதிலேயே நகர மன்ற உறுப்பினராக அரசியலில் காலடி வைத்த இவர், இன்று துணை மேயராக உயர்ந்திருப்பது இளம் தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.

பிரான்ஸ் அரசியலில் தமிழர் சமூகத்தின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான ஒரு முக்கிய சான்றாக இவரது இந்த முன்னேற்றம் பார்க்கப்படுகிறது.








Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top