பாடசாலைகளுக்கு விடுமுறையா? சற்றுமுன் வெளியான அறிவிப்பு!

Valluvan Media
0

 நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு எரிபொருள் பயன்பாட்டை குறைக்க பாடசாலைகளை மூடுவது குறித்து அரசாங்கம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.




மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சிறப்பு அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், புதன்கிழமைகளில் கல்வி வகுப்புகளை நடத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 10ஆம் திகதியுடன் தவணைகள் முடிவடைய உள்ளதாகவும், அதுவரை புதன்கிழமைகளில் மட்டும் பாடசாலை இயங்காது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளின் நிச்சயமற்ற தன்மையானது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதால், முடிந்தவரை வாரம் முழுவதும் 4 நாட்களும் பாடசாலைகளை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top