அமீரகம் மீது ஈரான் தாக்குதல்: காயமடைந்தவர்களில் இலங்கையர்களும் உள்ளதாக உறுதி

Valluvan Media
0

 ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் காயமடைந்த 58 பேரில் இலங்கைப் பிரஜைகளும் உள்ளதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.




மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றநிலைக்கு மத்தியில், ஈரான் கடந்த சில நாட்களாக அமீரகத்தின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த தாக்குதல்களில் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்துள்ள இலங்கையர்களின் சரியான எண்ணிக்கை அல்லது அவர்களின் தனிப்பட்ட விபரங்கள் குறித்து இதுவரை மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top