இலங்கையில் மீண்டும் குறைகிறதா தங்க விலை?- பவுணின் விலையில் அதிரடி மாற்றம்

Valluvan Media
0

 இலங்கையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது.




இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் (Sri Lanka Jewellers Association) தரவுகளின்படி, நேற்றைய தினம் (13.03.2026) 410,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 406,000 ரூபாவாகக் குறைந்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையில் 4,000 ரூபா வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதேபோல், நேற்று 379,200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 375,500 ரூபாவாகக் குறைந்துள்ளது. இதற்கமைய, 22 கரட் தங்கத்தின் விலையில் 3,700 ரூபா வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையில் தங்கத்தின் விலையில் இந்த ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top