அரச ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 4நாள் வேலை! வெளியானது அறிவிப்பு

Valluvan Media
0

 தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.




இது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நாளை (16 ஆம் திகதி ) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும். இதில் பங்கேற்குமாறு அரசாங்கத் துறைத் தலைவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகத்திற்கான முன்மொழிவுகளை இந்த கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு துறைத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட கலந்துரையாடலின் போது நான்கு நாள் வேலை வாரத்தை அமுல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதால், அதற்கான பொருத்தமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு துறைத் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top