14 வயது சிறுமிக்கு 55 வயது நபர் செய்த கொடூரம்! மட்டக்களப்பில் சம்பவம்

Valluvan Media
0

 மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் ஒன்றைவிட்ட சகோதரியின் மகளான 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 55 வயதுடைய ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே,பிரபாகரன் கடந்த மாதம் 26ம் திகதி தீர்ப்பளித்தார்.




குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியை கடந்த 2014ம் ஆண்டு யூன் மாதம் 21 ம் திகதி பாலியல் துஷ்பிரயேதகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் மாமா முறையான குறித்த நபரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.

குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் குறித்த வழக்கு  கடந்த பெப்பிரவரி 26 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது குறித்த நபர் ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் மூலம் குற்றவாளியாக கண்டறியப்பட்டதையடுத்து  அவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டணையும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top