சதொசவில் 100 பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு! முந்தியடிக்கும் மக்கள் கூட்டம்

Valluvan Media
0

 எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 100 வகை பொருட்களுக்கு விசேட தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.




சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விடவும் குறைந்த விலையில் சதொசவில் அரிசி உள்ளிட்ட பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சதொச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோகிராம் அடிப்படையில் பொருட்களின் புதிய விலைகள் வருமாறு:

வெள்ளை நாடு அரிசி: ரூ. 217

வெள்ளை பச்சை அரிசி: ரூ. 203

கோதுமை மா: ரூ. 254

நெத்தலி: ரூ. 1,050

பருப்பு: ரூ. 264

பெரிய வெங்காயம்: ரூ. 150 - 160 (இடைப்பட்ட விலை)

இந்தப் பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் கொள்வனவு வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சலுகைகள் சாதாரண நுகர்வோருக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன என்றும், வியாபாரிகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

சதொசவில் பொருட்கள் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டமொன்றை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

சதொசவில் 2,500 ரூபாவிற்கும் அதிகமாக பொருட்களைக் கொள்வனவு செய்பவர்களுக்கு ஒரு 'கூப்பன்' வழங்கப்படும்.

இந்தக் கூப்பன்கள் மூலம் அதிர்ஷ்டக் குலுக்கல் நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.


"சதொசவிற்கு வந்து 2,500 ரூபாவிற்கு மேல் பொருட்களைக் கொள்வனவு செய்யுங்கள். சிற்றூர்ந்து அல்லது உந்துருளிகளை பரிசாக வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்" என அமைச்சர் இதன்போது பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top