Top News

எந்த அறிகுறியும் இல்லை – அரிய நோயால் மாணவர் உயிரிழப்பு!

 கொழும்பு பிரபல பாடசாலை மாணவர் ஒருவர் அரிய வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு அகால மரணமடைந்துள்ளார்.




11 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மீதொடமுல்லவை சேர்ந்த 16 வயதான ஒனெத் மெத்மிகா என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் அகில இலங்கை பூப்பந்து சாம்பியன்ஷிப்பை வென்று தனது பாடசாலைக்கும் மீதொடமுல்ல கிராமத்திற்கும் பெரும் புகழை சேர்த்த பெருமையை பெற்றுள்ளார்.

2024 ஆம் ஆண்டு அகில இலங்கை பூப்பந்து சாம்பியன்ஷிப்பை வென்ற அவர், ஒரு துடிப்பான வீரராக இருந்துள்ளார்.இறப்பதற்கு முன், அவர் தனது தாயிடம், "அம்மா, இந்த வருடம் சாதாரண தரத்தில் ஒன்பது ஏ சித்திகளை பெறுவேன்" என்றும் கூறியுள்ளார்.

ஒனெத்தின் மரணம் ADEM (Acute Disseminated Encephalomyelitis) எனப்படும் மிகவும் அரிய வைரஸ் நோயோல் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நிலை இரண்டரை லட்சம் பேரில் ஒருவரை பாதிக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பாக்டீரியா அல்லது வைரஸ், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு மூளை மற்றும் முதுகுத் தண்டில் உள்ள பாதுகாப்பு சவ்வை (மைலின்) தாக்குகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இலங்கை அருகே கடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு அவசர அறிவிப்பு

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஒனெத்தின் தந்தை சாமர தனுஷ்க, "என் மகனுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. அவர் மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தார்.

வாந்தி மற்றும் தலைச்சுற்றல் காரணமாக கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். MRI ஸ்கேன் மூலம் அவரது மூளையில் உள்ள சவ்வுகள் உரிந்து வருவது தெரியவந்தது. அவரது இரத்த அழுத்தம் குறைந்து இதயம் நின்றுவிட்டது. அனைத்து பதக்கங்களும் கோப்பைகளும் இருந்தபோதிலும், என் மகன் இன்று இல்லை." என தெரிவித்துள்ளார்.

குழந்தைகளில் பார்வை பிரச்சினைகள் மற்றும் கடுமையான தலைவலி, நடக்க சிரமம், வலிப்பு, வாந்தி அல்லது மயக்கம் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாக மருத்துவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

Sri Lanka student death
ADEM virus
rare virus disease
Colombo news today
health news Sri Lanka

Post a Comment

Previous Post Next Post