4 ஆண்டுகளுக்கு மேலாக துடிதுடித்த வேதனை! வயிற்றில் இருந்த மர்ம பொருள்

Valluvan Media
0

 இந்தியாவின், கேரள மாநிலம் ஆலப்புழா புன்னபுரா பகுதியை சேர்ந்தவர் உஷா ஜோசப் . இவர், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு, 2021ம் ஆண்டு ஆலப்புழா அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.



அதன் பிறகு, தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வலி குறைய வில்லை. ஆண்டு கணக்கில் மாத்திரை சாப்பிட்டு வந்ததால் அவருக்கு, சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு, சிறுநீரில் ரத்தம் வெளியேறியது.

இதனால் பயந்துபோன உஷா, சிறுநீரக மருத்துவரை அணுகினார். அங்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரே-வில், அவர் வயிற்றில் 10 செமீ நீள கத்தரிக்கோல் இருப்பது கண்டறியப்பட்டது.

அதன்பிறகு நடந்த விசாரணையில், 2021ம் ஆண்டு அறுவை சிகிச்சையின்போது, அவர் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த விவகாரம் தெரிய வந்தது. இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

👉 Read Full Details

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top